ங்கோயா..... நானும் பல மாசமாய் பார்த்து கொண்டு இருக்கிறேன் .... இந்த பதிவாளர் தொல்லை தங்க முடியல. சரி பதிவு எழுத என்ன அடிப்படை தகுதி ன்னு பார்த்தேன். வேற ஒன்னும் இல்லை ஒரு இன்டர்நெட் இணைப்பு, கம்ப்யூட்டர், கொஞ்சம் அறிவு இருந்தால் போதும் பதிவு எழுதன்னு ஒரு பிரபலம் என்கிட்டே சொன்னாரு. யார் அந்த பிரபலம் ன்னு கேட்காதிங்க......
கட்டாயம் பதிவுலகத்தை அடுத்த கட்டடத்திற்கு கொண்டு போகும் முயற்சியில் அவர் இல்லை. எனக்கும் ரொம்ப நாளாய் ஆசை ரௌடி ஆகா வேண்டும் என்று. இன்னொரு விஷயம் நான் ஏற்கனவே ஒரு பெரிய எழுத்தாளன் தான். ஹீ ஹி ஹி
சின்ன வயசில் இருந்து எவ்வளவு எக்ஸாம் எழுதிருக்கோம். அப்பா நானும் எழுத்தாளன் தானே.
சரி முதல் பதிவு.... எதாவது நல்ல விஷயம் எழுதன்னும் எனக்கும் ஆசை தான். நான் என் மரமண்டையில் ஒன்றும் தோன்ற மாட்டேன்ங்குது. என்ன செய்ய.
பிறகு.... நானும் உங்களை போல் ஒருவன் தான்.
அதே இரண்டு முக்கு, ஒரு வாய், இரண்டு காது, இன்னும் பற்பல.....
நேத்து மெரினா கடற்க்கரை பக்கம் போனேன்.... அங்க தான் பதிவாளர்களை பார்த்தேன். சரி என்ன செய்றாங்க ன்னு எனக்கு பார்க்க ஒரே ஆவல்....அவுல்.... அவங்க பேசுவது ஒன்னும் கேட்கவில்லை.சரி டைம் ஆகிருச்சு பிறகு பார்போம்
Sunday, November 22, 2009
Subscribe to:
Posts (Atom)